manmohan singh health: மன்மோகன் சிங் உடல் நிலை: பிரதமர் மோடி ட்வீட்! – pm modi wishes speedy recovery of manmohan singh

0
8


ஹைலைட்ஸ்:

  • மன்மோகன் சிங்கின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது
  • சமூக வலைதளங்களில் அவரது உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்

நாட்டின் பிரதமராக தொடர்ந்து 10 ஆண்டு காலம் பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவரான மன்மோகன் சிங் (89), வயது மூப்பு மற்றும் உடல் நலப் பிரச்னைகளால் பொது நிகழ்ச்சிகளில் அண்மை காலமாக கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.

இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக, கடுமையான காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த மன்மோகன் சிங், உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. சமூக வலைதளங்களில் அவரது உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவருக்கு வழக்கமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மன்மோகன் சிங் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்பப் வேண்டும் என்று அனைவரும் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், “டாக்டர் மன்மோகன் சிங் ஜி நல்ல உடல் நலம் பெறவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் உடல்நிலை எப்படியிருக்கிறது? நேரில் நலம் விசாரித்த அமைச்சர்!

முன்னதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா நேரில் நலம் விசாரித்தார். கடந்த ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மன்மோகன் சிங், பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.