23.5 C
London
Friday, August 19, 2022

CWG 2022 | நீளம் தாண்டுதலில் ஃபவுல் பிளே செய்தாரா ஸ்ரீசங்கர்? – ஓர் எளிய விளக்கம்

- Advertisement -
- Advertisement -

நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் தான் தங்கப் பதக்கம் வென்றதாக கருதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் இந்திய தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர். ஆனால், அவருக்கு கிடைத்ததோ வெள்ளிப் பதக்கம். காரணம், அவரது பேஸ்ட் ஜம்ப் ஒன்று ஃபவுல் என அறிவிக்கப்பட்டது. உண்மையில் அவர் தவறு செய்தாரா என்பதைப் பார்ப்போம்.

இந்திய அணியின் பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசங்கர். நீளம் தாண்டுதலில் புலிப் பாய்ச்சல் பாய்ந்து தேசிய சாதனை படைத்தவர். பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் ஆடவர் நீளம் தாண்டுதல் பதக்கம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் அவரது ஆறு வாய்ப்புகளில் 7.60, 7.84, 7.84 மற்றும் 8.08 மீட்டர் நீளம் தாண்டி அசத்தி இருந்தார். அவை அனைத்தும் முறையாக (லீகல்) அவர் தாண்டியதாக சொல்லப்பட்டது. அதே நேரத்தில் நான்கு மற்றும் ஆறாவது வாய்ப்பின்போது அவர் ஃபவுல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஃபவுல் என அறிவிக்கப்பட்டு அதற்கு ரெட் Flag கொடுக்கப்பட்ட அந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றில் அவர் கிட்டத்தட்ட 8.20 மீட்டர் ரேஞ்சுக்கு நீளம் தாண்டி இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இந்த 8.20 மீட்டர் ரேஞ்ச் வாய்ப்பில் அவரது ஷூவின் டோ பகுதிக்கும் டேக் ஆஃப் லீகல் தானா என்பதை சரிபார்க்கும் டேக் ஆஃப் போர்டின் இறுதியில் உள்ள டிஜிட்டல் லேசர் பீம் லைனுக்கும் மில்லிமீட்டர் அளவு இடைவெளி இருப்பது புகைப்படம் ஒன்றில் அப்பட்டமாக தெரிகிறது. இருந்தும் அது ஃபவுல் என அறிவித்திருப்பதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

இதற்கு உலக தடகள ரூல்-புக்கில் கொண்டுவரப்பட்ட புதிய விதியின் மாற்றம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமான கருத்துகளை சொல்லி வருகின்றனர்.

ஸ்ரீசங்கர் என்ன சொன்னார்?

“வரும் நாட்களில் நாங்கள் இந்த டேக் ஆஃப் லைன் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இப்போது வரையில் டேக் ஆஃப் போர்டின் இறுதிமுனையில்தான் ஜம்ப் எடுக்கிறோம். சிறப்பான ஜம்பிற்காக 0 சென்டிமீட்டரில் டேக் ஆஃப் ஆவது நல்ல விஷயம்தான். இருந்தாலும் இது தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் இல்லை. அதனால் இனி 4-5 சென்டிமீட்டர்கள் முன்கூட்டியே டேக் ஆஃப் ஆவது சரியான விஷயமாக இருக்கும். அப்போது இந்த ஃபவுல் சிக்கல் வராது” என ஸ்ரீசங்கர் தெரிவித்துள்ளார்.- Advertisement -
Latest news

எத்தியோப்பியா: 37,000 அடி உயரத்தில் விமானிகள் தூங்கியதால் தரையிரங்க தாமதமான விமானம்

ஹடிஸ் அபாபா: எத்தியோப்பியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரு விமானிகள் பயணத்தின்போது தூங்கிவிட்டதால் விமானம் தாமதமாக வந்த நிகழ்வு நடந்திருக்கிறது. சூடானின் கார்தம் பகுதியிலிருந்து எத்தியோபியாவின் தலைநகரான ஹடிஸ் அபாபாவுக்கு போயிங் 737 விமானம்...
- Advertisement -

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து...

திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிஃபாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர்...

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

<!-- QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை – Athavan News 12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக...
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here