பர்மிங்கம்: பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவு இறுதிப்போட்டி பஜ்ரங் புனியாவுக்கும் கனடாவின் லாச்லன் மெக்னீல் இடையே நடைபெற்றது. இதில் பஜ்ரங் புனியா 9-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் பஜ்ரங் புனியா. இதன்மூலம், காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். முன்னதாக, இவர் 2018 காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கம் வென்றிருந்தார்.
இதேபோல், மகளிர் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக், கனடாவின் அனா கோடினெஸ் கோன்சாலஸ் உடன் போட்டிப்போட்டார் சாக்ஷி. இதில், கோன்சாலஸை தோல்வியை தழுவவைத்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்
சர்வதேச அளவிலான மல்யுத்த போட்டிகளில் சாக்ஷி மாலிக் இதுவரை ஒரு தங்கம் மட்டுமே கைப்பற்றியிருந்தார். இப்போது இரண்டாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர். இதேபோல், காமன்வெல்த் தொடரில் சாக்ஷி வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.
இதனிடையே, இன்று இரண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளதன் மூலம் இதுவரை நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியா 8 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது.
முன்னதாக, மகளிர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக் நைஜீரியாவின் ஒடுனாயோ ஃபோலாசடே அடேகுரோயேவை எதிர்கொண்டார். இதில் அன்ஷு மாலிக் தோல்வியை தழுவியதால், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.