வண்ண வண்ண கலர் தாவணியில் பொங்கலை கொண்டாடிய சீரியல் நடிகைகள்.! வைரலாகும் புகைப்படம்

0
10


ஒட்டுமொத்த தமிழ்நாடே பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகிறது அந்த வகையில் சினிமா பிரபலங்களும் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அவ்வாறு பொங்கலை கொண்டாடும் பொழுது புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் தங்களது வீடுகளில் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடி உள்ளார்கள். அதிலும் கலர் கலராக தாவணி அணிந்துகொண்டு பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடினார் கள் அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

கேபிரில்லா – நடிகை கேப்ரில்லா பிக்பாஸ் நான்காவது நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர். இவர் கண்டாங்கி சேலை அணிந்து கொண்டு பொங்கல் பானையை பிடித்தபடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் உங்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மகிழ்ச்சி, அமைதி, ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும் என நம்புகிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

gabrila
gabrila

யாஷிகா ஆனந்த்- பிக்பாஸ் மூன்றாவது சீசன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர். இந்த நிலையில்  இளஞ்சிவப்பு நிற தாவணி அணிந்து  தனது அழகான புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

yashika ananth
yashika ananth

தர்ஷா குப்தா – குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்  இவர் கண்டாங்கி சேலை அணிந்து கொண்டு பொங்கல் பானை அருகே உட்கார்ந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

dharsha kupta
dharsha kupta

சாக்ஷி அகர்வால் – பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்பிரபலம் அடைந்தவர் சாக்ஷி அகர்வால் அரண்மனை3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இருவரும் தாவணி புடவை அணிந்து கொண்டு பொங்கல் தினத்தை கொண்டாடி அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

சாக்ஷி
சாக்ஷி

ஸ்ரீநிஷா -சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர் இவர் பாவாடை தாவணியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

srinisha
srinisha

The post வண்ண வண்ண கலர் தாவணியில் பொங்கலை கொண்டாடிய சீரியல் நடிகைகள்.! வைரலாகும் புகைப்படம் appeared first on tamil360newz.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here