‘கோடி கொப்பா 3’ வெளியீட்டில் சிக்கல்; ரசிகர்கள் கொந்தளிப்பு: சுதீப் வேண்டுகோள்

0
8


‘கோடி கொப்பா 3’ வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் கோபமடைந்து திரையரங்குகளைச் சேதப்படுத்தினர். ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று சுதீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவா கார்த்திக் இயக்கத்தில் சுதீப், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோடி கொப்பா 3’. கரோனா அச்சுறுத்தலால் நீண்ட நாட்களாக இந்தப் படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், இன்று (அக்டோபர் 14) வெளியாக இருந்தது.