கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலி: அமெரிக்காவில் வேலையில்லா பிரச்சினை!

கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலி: அமெரிக்காவில் வேலையில்லா பிரச்சினை!


அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலியால் வேலையில்லா பிரச்சினை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்கள் முதல் சிறிய வர்த்தக அலுவலகங்கள் வரை மூடப்பட்டுள்ளன.

இதனால் பலதரப்பட்ட மக்கள் தம் அன்றாட வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்.
கடந்த வார இறுதியில் 7 இலட்சத்து 11 ஆயிரம் பேர் வேலை இழந்திருந்தனர்.

ஆனால் தற்போது 7 இலட்சத்து 42 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் நல அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வேலையில்லா பிரச்சினையால், 12 மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள் என அந்த அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் நிலவும் இச்சூழல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.