ஓவியக் கூடமாகும் உடல்!

0
19


உடல் பாகங்களில் ஆசை ஆசையாகத் தீட்டிக்கொள்ளும் டாட்டூகளையே விஞ்சிவிட்டன ‘பாடி ஆர்ட்’ எனப்படும் உடல் ஓவியக் கலை.  ஒட்டுமொத்த உடலையும் வண்ணமயமான ஓவியக் கூடமாக்கி அசத்துகிறார்கள் இந்தக் காலத்து இளையோர். பார்ப்பதற்கு டாட்டூபோலவே இருந்தாலும், இது டாட்டூ வகையைச் சேர்ந்தது அல்ல. தற்காலிகமாக மட்டுமே உடல் ஓவியம் இருக்கும் என்பதால், இளையோர் மத்தியில் இதன் மீதான மோகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உடல் ஓவியக் கலை வளர்ந்துவருவதால், வெளிநாடுகளில் ஓவியர்களுக்கும் வரவேற்பு கூடிவிட்டது. மனதுக்குப் பிடித்த ஓவியங்கள் தொடங்கி விசித்திரமான தோற்றங்கள், விதவிதமான ஒப்பனைகள், விநோதமான அலங்காரங்கள் என உடலில் வண்ணம் தீட்டிக்கொள்வோர் எண்ணிக்கையும் உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.