ஏழு தசாப்த அரசியல் வரலாற்றில் காங்கிரஸிற்கு பெரும் பின்னடைவு- குலாம் நபி

ஏழு தசாப்த அரசியல் வரலாற்றில் காங்கிரஸிற்கு பெரும் பின்னடைவு- குலாம் நபி


கடந்த 72 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், காங்கிரஸ் கட்சி மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்படி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க் கட்சிப் பதவி, கடந்த இரண்டு முறையும் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை என்பதில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக குலாம் நபி ஆசாத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.