எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம்: கிம் | North Korean leader Kim Jong Un has said his country’s weapons development

0
11


எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம் என்று வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மேம்பாட்டுக் கண்காட்சியில் கிம் பேசும்போது, “எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம். தென்கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதப் போக்குமே வடகொரியா தனது ராணுவத்தை மேம்படுத்தக் காரணமாகிறது. தற்காப்புக்காகவே நாங்கள் ஏவுகணை பரிசோதனைகளைச் செய்கிறோம்.

வடகொரியா அதன் ராணுவ பலத்தை அதிகரிக்கவே விரும்புகிறது. போரை விரும்பவில்லை. நாங்கள் வலிமையாக இருக்க வேண்டும். நம் நாடு எதிர்கொள்ளும் ராணுவ அச்சுறுத்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததை விட வித்தியாசமானது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஏவுகணை சோதனை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை மனநிலையில் நடந்து கொள்வதாக வடகொரியா குற்றம் சாட்டியது.

ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏவுகணை சோதனை காரணமாகவே அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் மோதல் நிலவியது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை காரணமாகப் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.