இந்தியாவுடன் சிங்கப்பூர், தாய்லாந்து இணைந்த கடல் போர் பயிற்சி நிறைவடைந்தது!

இந்தியாவுடன் சிங்கப்பூர், தாய்லாந்து இணைந்த கடல் போர் பயிற்சி நிறைவடைந்தது!


சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துடன் இணைந்து இந்திய கடற்படை நடத்திய கூட்டுப் பயிற்சி நிறைவடைந்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் குறித்த மூன்று நாடுகளும் பங்கேற்ற கூட்டுப்பயிற்சி நேற்று தொடங்கியதுடன் இரண்டாவது நாளான இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்துள்ளது.

இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலான ஐ.என்.எஸ். காமோர்த்தா மற்றும் கார்முக் ஏவுகணைகள் இந்தப் போர்ப்  பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

குறித்த மூன்று நாடுகள் பங்கேற்ற கூட்டுப் பயிற்சிக்கு இவ்வாண்டு சிங்கப்பூர் கடற்படை தலைமை வகித்திருந்தது.

கடல் பாதுகாப்பை மேம்படுத்துதல், பரஸ்பர புரிதலை வளர்த்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்தக் கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவுடன் அவுஸ்ரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட மலபார் போர்ப் பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.